Category Archives: Tamil Articles

பெண்களுக்கு வீட்டு வேலைகள் சாபமா?

சமையல், சாப்பாடு, உறவு, வீட்டுப் பராமரிப்பு மற்றும் குழந்தை வளர்ப்பு என இல்லத்தரசி என்ற பாத்திரத்தைச் சுமக்காத பெண்கள் எங்கேயும் இருக்க முடியாது.
அதேவேளை, தான் விரும்பாமலே இப் பொறுப்புகளை ஏற்க வேண்டிய சூழலுக்கு ஆளாகி விரக்தியோடு பேசும் பெண்களும் எம்மத்தியில் இல்லாமலில்லை.
ஆனால், ஓயாமல் தன்னைத் துரத்தும் இந்தக் கடமைகளைப் பெண்கள் உளரீதியாக எவ்வாறு நோக்குகிறார்கள்? என்ன வகையான எண்ணப்பாட்டைக் கொண்டிருக்கிறார்கள்? என்பதை அவசியம் மீள்பரிசீலனை செய்ய வேண்டியிருக்கிறது.

Continue reading பெண்களுக்கு வீட்டு வேலைகள் சாபமா?

Advertisements

இது பெண்களைக் குறை கூறும் ஆண்களுக்கு…

[ ”தங்களின் மறைவிடங்களை பாதுகாத்துக்கொள்ளும் ஆண்களுக்கும், பாதுகாத்துக்கொள்ளும் பெண்களுக்கும்” என்று தனது திருமறையில் கூறுவதின் மூலம் கற்பொழுக்கம் ஆண் – பெண் இருபாலருக்கும் அவசியம் என்பதை அல்லாஹ் வலியுறுத்துகிறான். அதிலும் பெண்களுக்கு முன்பாக ஆண்களை குறிப்பிடுகிறான் என்பதை ஆண்கள் கவனிக்கவும்.]

Continue reading இது பெண்களைக் குறை கூறும் ஆண்களுக்கு…

தொழுகையில் தவிர்க்க வேண்டிய பொதுவான தவறுகள்

முஸ்லிம்கள் தொழுகையில் செய்யக் கூடிய பொதுவான தவறுகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. அல்லாஹ் நம்முடைய வணக்கத்தை ஏற்றுக்கொண்டு அதற்குரிய கூலியை கொடுப்பான் என்ற நம்பிக்கையில் நாம் அவற்றை தவிர்ந்துகொள்ள வேண்டும்.

1) கணுக்காலுக்கு கீழே ஆடை அணிதல்.
2) தொழுகைக்கு வருமுன் துர் வாசனையுடைய பூண்டு, வெங்காயம் மற்றும் புகை பிடித்து முடித்து விடுவது.

Continue reading தொழுகையில் தவிர்க்க வேண்டிய பொதுவான தவறுகள்

ஹஜ்ஜின் புனிதமான நோக்கங்கள்

எல்லாம் வல்ல இறைவன் இந்த முஸ்லிம் சமுதாயத்திற்குக் கடமையாக்கி வைத்திருக்கின்ற அத்தனை வணக்க வழிபாடுகளும் ஒரு புனிதமான நோக்கத்தைக் கொண்டவையாக இருக்கின்றன.
அவன் மொழிகின்ற கலிமாவான ஷஹாதத்தாக இருக்கட்டும், தொழுகையாக இருக்கட்டும், நோன்பாக இருக்கட்டும், ஸகாத் மற்றும் தான தர்மங்களாக இருக்கட்டும், வாழ்நாளில் ஒருமுறை வசதிவாய்க்கப்பட்டவர்களுக்காக கடமையாக்கப்பட்டிருக்கும் ஹஜ்ஜாக இருக்கட்டும்.., இவை அனைத்தும் ஒரு உயரிய நோக்கத்திற்காகவே கடமையாக்கப்பட்டிருக்கின்றன.

Continue reading ஹஜ்ஜின் புனிதமான நோக்கங்கள்

அல் குர்ஆன் ஓர் அற்புதம்

[ ”There is probably in the world no other book which has remained twelve centuries with so pure a text” (பன்னிரு நூற்றாண்டுகளாகப் பாருலகில் இத்துணைத் தூய்மையுடன் நின்றிலங்கும். இன்னொரு நூலே கிடையாது)  என்பார் பாதிரியார் வில்லியம் மூர்

 

அற்புதங்கள் பலவற்றை விளைவித்துக் காலத்தின் கோலத்தால் கவர்ச்சியை இழந்து விடாமல் பூத்துக் குலுங்கும் அறிவு வளர்ச்சியினால் புதுமை மாறிவிடாமல், இன்றளவும் இணையற்ற நூலாய் விளங்கி வருகின்றது அல்குர்ஆன். இத்தகைய அற்புதங்களை ஆறறிவு படைத்த அற்புத மனிதன் ஆராய்ந்து பார்க்க வேண்டாமா?.]

Continue reading அல் குர்ஆன் ஓர் அற்புதம்

தாலிபான்களிடம் சிக்கி இஸ்லாத்தின் மீது ஆர்வம் கொண்ட ஆங்கிலேய பெண் பத்திரிகையளர் ” சகோதரி யுவான் ரிட்லி “

screen-shot-2014-09-07-at-6-40-17-pm“நான் தாலிபான்களால் சிறைப் பிடிக்கப்படும் வரை புர்கா அணிந்த பெண்களை மிகவும் ஒடுக்கப்பட்ட படைப்பினமாகவே கருதி வந்தேன்.

செப்டம்பர் 2001-ல் அமெரிக்காவில் பயங்கரவாத தாக்குதல் நடைபெற்று சற்றே 15 நாட்களுக்குப் பிறகு ஒரு நீல நிற புர்காவில் என்னை மறைத்துக் கொண்டு ஆப்கானிஸ்தான் எல்லையைக் கடந்து உள்ளே புகுந்தேன். தாலிபான்களின் கொடுமையான ஆட்சியில் சராசரி மனித வாழ்க்கையைப் பற்றி நான் பணியாற்றிய பத்திரிகைக்கு செய்திகள் திரட்டுவது என் ரகசிய திட்டம். ஆனால் நான் கண்டுபிடிக்கப் பட்டு, கைது செய்யப்பட்டு, பத்து நாட்கள் சிறையில் அடைக்கப்பட்டேன். Continue reading தாலிபான்களிடம் சிக்கி இஸ்லாத்தின் மீது ஆர்வம் கொண்ட ஆங்கிலேய பெண் பத்திரிகையளர் ” சகோதரி யுவான் ரிட்லி “

முஸ்லிம் தனியார் சட்டத்தைப் பாதுகாக்கும் நோக்கிலான ஆர்ப்பாட்டம் ஏற்படுத்திய தடயங்கள்

right-to-information-actஇலங்கை முஸ்லிம்கள் தமது உரிமைகளை வென்றுகொள்வதற்கும், தனித்துவங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்கும் பாடுபடுவது அவசியமாகும் என்பதில் இரு கருத்துக்கு இடமில்லை.ஆனால்,அதற்கான வழிமுறைகள் முற்றிலும் இலங்கை சூழலைக் கருத்திற் கொண்டவையாக இருக்க வேண்டும். இல்லாத போது ’குளிக்கப் போய் சேறு பூசியதாக’ வோ, ’முழம் ஏறி சாண் சறுக்கியதாக’ வோ அமையும். Continue reading முஸ்லிம் தனியார் சட்டத்தைப் பாதுகாக்கும் நோக்கிலான ஆர்ப்பாட்டம் ஏற்படுத்திய தடயங்கள்