வாலிபர்களே! திருமணம் செய்ய ஆசையா?


திருமணம்திருமணம் செய்வதற்கு முன் இதையும் கொஞ்சம் அறிந்து கொள்ளுங்கள்!

ஒரு முஸ்லிமான ஆண் திருமணம் செய்வதற்கு தனக்கு வாழ்க்கை துணைவியாக வரவிருக்கும் பெண்ணை நேரில் சென்று பார்ப்பது நபிவழியாகும். ஆனால் இன்று முஸ்லிம் சமுதாயத்தில் இந்த நடைமுறை மாற்றமடைந்து பெண் பார்ப்பதற்கு குடும்பத்தினர் ஒவ்வொருவரும் வெவ்வேறு நேரங்களில் சென்று பார்த்து விட்டு கடைசியில் பெண் பிடிக்கவில்லை என்று சொல்லி விடுகிறார்கள்.

அதுவும் பெண் பிடிக்காதது மணமகனுக்கல்ல. அவனது குடும்பத்தினர்க்கு என்பது கசப்பான உண்மை. அதேபோன்று குடும்ப அங்கத்தவர்கள் அனைவரும் பெண் பார்த்துவிட்டு வந்ததன் பின் கடைசியாக மணமகன் பெண்ணை பார்த்துவிட்டு தனக்கு பிடிக்கவில்லை என்கிறான்.

இவ்வாறு பலமுறை பெண் பார்த்துவிட்டு கடைசியில் பிடிக்கவி ல்லை என்பதால் அந்தப் பெண் எவ்வளவு மனவேதனை அடை வாள் என்பதை இவர்கள் சிந்திக்க வேண்டாமா? அது மட்டுமல்லாமல் அந்த பெண் வீட்டினர் வசதியற்றவர்களாக இருந்தால் எவ்வளவு சிரமத்திற்கு மத்தியில் ஏற்பாடு செய்ய வேண்டியிருக்கும், அவர்கள் சில வேளைகளில் கடன் பெற்றும் ஏற்பாடு களை செய்திருப்பார்கள்.

நாம் பலமுறை சென்று மூக்குமுட்ட சாப்பிட்டு விட்டு கடைசியில் பெண்ணை பிடிக்கவில்லை என்று சாதாரணமாகச் சொல்லிவிடுகிறோம். எனவே யார் மணமகனோ அவன் முதலிலேயே சென்று பெண்ணை பார்த்து சம்மதம் சொல்லவேண்டும் என்பதே இஸ்லாத்தின் நிலைப்பாடாகும். திருமணம் என்பது ஊருக்கல்ல, எமது குடும்பத்திற்கல்ல. நாம் ஒரு பெண்ணை திருமணம் முடிப்பதென்றால் நாம்தான் பெண்ணை பார்த்து உறுதி செய்ய வேண்டும்.

ஒரு முஸ்லிம் ஆண், திருமணம் செய்யும் நோக்கத்தில் பெண்ணைப் பார்க்க சென்றால் பெண் மார்க்கப்பற்று உள்ளவளா என்பதைத் தான் பார்ப்பான், அதை விடுத்து சினிமா நடிகை போன்று இருக்கவேண்டும் என்ற நோக்கத்தில் பெண் பார்க்க சென்றால் அவன் முஸ்லிமாக நடிக்கும் பெயரளவு முஸ்லிம் என்பதில் சந்தேகம் இல்லை.

இளமையில் வழி தவறி விடக்கூடாது என்ற நோக்கமும் திருமணத்திற்கு முக்கியம் என்பதால் மார்க்கப்பற்றுள்ள ஒரு பெண் தேவை என்ற நோக்கம் முதலில் இருக்க வேண்டும், பெண் மார்டனாக, ஸ்லிம்மாக, பேசியல் செய்த முகத்துடன் இருக்கவேண்டும் என்று எண்ணுபவன் பெண்ணை மணமுடித்து சினிமாவில் நடிக்கவைத்து சம்பாதிக்கப்போகிறானா? அல்லது மார்டன்செய்து கேட் வாக் செய்து சம்பாதிக்க வைக்கப் போகி றானா? ஹிஜாப் இன்றி ஜோடியாக கைகோர்த்து வெளியில் சுற்றி பார்க்கிறவர்களுக்கு அருமையான ஜோடியாக தெரிய வேண்டும் என்று எண்ணுகிறானா?

ஐவேளை தொழுகையை நிறைவேற்றி வரும் பெண் பேசியல் செய்து கொள்வாளா? ஐவேளை உளூ செய்து வரும் பெண்ணின் முகம் அல்லாஹ்வுக்குப் பொருத்தமான இருக்கும் பொலிவு போதாதா? அல்லாஹ்வை விட அல்லாஹ்வுக்கே சொல்லித்தரக்கூடியவர்கள் இந்த உலகில் உள்ளார்களா?

சினிமா நடிகை போன்று ஸ்லிம்மாக திருமணம் செய்து ஒரு குழந்தை பெற்ற பின் குண்டாவது இயற்கை. குண்டாகிவிட்டால் தலாக் சொல்லி அனுப்பிவிடுவாயா? ஆண்களும் கூட்டாக சேர்ந்து பெண்ணை பார்ப்பது கூடுமா? இஸ்லாமிய பெண் திருமணத்திற்காக தன்னை காண வரும் மணமகனுக்கு இஸ்லாம் வரையறுக்கப்பட்ட அளவில் தன்முகத்தைக் காட்டுவதற்கு அனுமதி இருக்கிறது ஆனால், அவனின் மாமன் மச்சான் எல்லாம் அப்பெண்ணை பார்க்க மார்க்கம் அனுமதிக்கிறதா என்றால் மார்க்கத்தில் அனுமதி இல்லை .

தலையை மறைத்து வைத்திருக்கும் பெண்ணை தலையில் இருந்து துணியை நீக்கச் சொல்லி மாப்பிள்ளையாக தன்னை எண்ணிக் கொண்டிருக்கும் மிருகத்தின் மாமன் மச்சான் எல்லாம் அன்னியப் பெண்ணை அப்படி பார்க்க இஸ்லாம் அனுமதிக்கவில்லை.

பெண் பார்க்கும் இன்னுமொரு முறைதான் மணமகனின் ,மணமகளின் போட்டோவை பார்த்து முடிவெடுப்பது. இன்றைய காலகட்டத்தில் போட்டோக்களில் ஒருவரை எவ்வாறு வேண்டுமானாலும் நவீன தொழிநுட்பத்தை பயன்படுத்தி மாற்றிக் கொள்ளலாம்.

எனவே ஒருவர் போட்டோவை பார்த்து சம்மதம் சொல்லிவிட்டு நேரில் பார்த்ததும் திகைத்துவிடுகின்றார். குறிப்பாக வெளி நாடுகளில் வேளை செய்பவர்கள் அங்கிருந்துகொண்டு இன்டர்நெட்டில், போட்டோவில் பெண் பார்ப்பதை தவிர்க்க வேண்டும். ஒருவருடைய தோற்றத்தை நேரில் பார்ப்பதின் மூலமே மிகச் சரியாக அறிந்துகொள்ளலாம்.

இதனாலேயே இஸ்லாம் ஒரு பெண்ணை திருமணம் செய்வதென்றால் நேரில் சென்று பார்த்துக்கொள் என்று கட்டளையிடுகிறது என்பதை புரிந்து செயற்படுவோம். நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நான்கு (நோக்கங்களு) க்காக ஒரு பெண் மணமுடிக்கப்ப டுகிறாள்:

1. அவளது செல்வத்திற்காக.
2. அவளது குடும்பப் பாரம்பரியத்திற்காக.
3. அவளது அழகிற்காக.
4. அவளது மார்க்க (நல்லொழுக்க)த்திற்காக.

ஆகவே, மார்க்க (நல்லொழுக்க)ம் உடையவளை (மணந்து) கொண்டு வெற்றி அடைந்துகொள்!

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s