அவர்கள் செல்வாக்கில்லாதவர்கள்


நமது சமூகத்ததில் ஒரு பிரபல்யமான மனிதரோ அல்லது அவரது குடும்ப அங்கத்தினரோ மரணித்து விட்டால்……

அவருக்காக முக நூல் போன்ற சமூக வலைத்தளங்களில் அழுவதும் கண்ணீரில் கரைவதும், அனலில் இட்ட அணிலென துடிப்பதும், கோடையின் கொடுமைக்கு ஆளான பனியெனக் கரைவதும், கொன்டோலன்ஸ் மெசேஜ் அனுப்பி கதறுவதும், அவரது அருமை பெருமைகளைச் சொல்லி அமர்க்களப்படுத்துவதும், பந்தி பந்தியாய் அவரைப் பற்றி எழுதித் தள்ளுவதும், அவருக்காக இரு கரமேந்தி யா அல்லாஹ் அவருக்கு “ஜன்னத்துல் பிர்தௌசை கொடுத்து விடு” என்று சுஜுதில் கிடந்து பிரார்த்திப்பதுமென இத்யாதி இத்யாதி.

ஆனால்…..அதே தருணத்தில்…………… அந்தப் பிரபலம் மரணித்த, அந்தப் பிரபலத்தின் குடும்ப அங்கத்தினன் மரணித்த இதே சமூகத்தில்தான் செல்வமில்லாத படிப்பில்லாத எந்தவித செல்வாக்குமில்லாத பலர் மருந்தின்றி, மருந்து வாங்க பணமின்றி, கொடிய நோயினால், வறுமையால் ஒரு நேர உணவுக்கும் வழியின்றி, நிரந்தரமாக குந்தியிருக்க ஒரு குடிசையின்றி, எல்லா வித மனித மற்றும் அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்ட நிலையில், மிகப் பயங்கரமாக அநியாயம் இழைக்கப்பட்ட நிலையில் கேட்பார் பார்ப்பாரின்றி அநியாயமாக யாருக்கும் தெரியாமல் தினம் தினம் செத்து மடிந்து கொண்டிருக்கின்றார்கள்.

இவர்களது மரணம் யாருக்கும் தெரிய வருவதில்லை. அவர்களது மரணம் யாருக்கும் தெரிய வேண்டிய தேவையும் இங்கு கிடையாது.

இவர்களது மரணம் சென்சேஷன் இல்லாதது. பப்ளிஸிட்டிக்கு உதவாதது. யாருக்கும் அக்கறையை கொடுக்காதது. மீடியாக்களைப் பொறுத்த வரை ரொம்ப ரொம்ப அநாவசியமானது.

இவர்களது மரணத்துக்கு இரங்கல் உரை எழுத இங்கே யாரும் கிடையாது. தேம்பி அழுவதற்கு யாருக்கும் கண்கள் கிடையாது. இவர்களது மரண்த்துக்கு கவிதை எழுத இங்கு எந்தக் கவிஞனும் கிடையாது. இவர்களது அருமை பெருமைகளைப் பற்றி வார்த்தைகள் வடிக்க பேனாக்கார சிற்பிகள் யாரும் இல்லை. இவர்களது மரணத்தைப் பற்றி பத்திகள் எழுத இங்கு எல்லோருக்குமே சொற் பஞ்சம்.

ஒரே காரணம் இவர்கள் செல்வமில்லாத ஏழைகள்…வறுமைக்குப் பிறந்த பரம்பரை வாரிசுகள். படிக்காதவர்கள்….குறிப்பாக சமூகத்தில் எந்த வித செல்வாக்குமில்லாதவர்கள்.

செல்வாக்குள்ளவனது மரண வீட்டில் நிற்பதற்கு கூட இடம் இருக்காது. ஆனால் இந்த பாவப்பட்ட மக்களது மையத்து வீடுகளில் சந்தூக்கினை தூக்குவதற்காக மட்டுமே ஆட்கள் வந்திருப்பார்கள்.

இவர்கள் இறந்து விட்டார்கள்…அவ்வளவுதான்.
என்னைப் படைத்த எனது இரட்சகனே எனக்குப் பயமாக இருக்கின்றது.

– கிண்ணணியா சபருள்ளாஹ்
2016-10-13

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s