தொழுகையாளர்களுக்கு கேடுதான் !!


Question manஅஸ்ஸலாமு அலைக்கும் என் அன்பார்ந்த சகோதர சகோதரிகளே தலைப்பைப்பார்த்து பயந்துவிட்டீர்களா??

ஆம் “தொழுகையாளர்களுக்கு கேடுதான் !! “ என்பதை நான் சொல்லவில்லை மாறாக அல்லாஹ் தனது திருக் குர்ஆனில் கூறுகின்றான் . !!!!!!!! இந்த வசனத்தை நம்மில் எத்தனை பேர் அறிந்து வைத்துள்ளோம்?? இந்த வசனத்தின் பின்னணி மற்றும் கருத்துச் செறிவு பற்றிய அறிவு நம்மில் எத்தனை பேரிடம் தெளிவாக உள்ளது???????

அத்தியாயம் – 107 ஸூரத்துல் மாஊன் (அற்பப் பொருட்கள்)
அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகின்றேன்)

“1. (நபியே!) நியாயத்தீர்ப்பைப் பொய்ப்பிக்கின்றானே அவனை நீர் பார்த்தீரா?
2. பின்னர் அவன்தான் அநாதைகளை விரட்டுகிறான்.
3. மேலும், ஏழைக்கு உணவளிப்பதின் பேரிலும் அவன் தூண்டுவதில்லை.
4. இன்னும், (கவனமற்ற) தொழுகையாளிகளுக்குக் கேடுதான்.
5. அவர்கள் எத்தகையோர் என்றால் தம் தொழுகையில் பராமுகமாக(வும், அசிரத்தையாக)வும் இருப்போர்.
6. அவர்கள் பிறருக்குக் காண்பிக்(கவே தான் தொழு)கிறார்கள்.
7. மேலும், அற்பமான (புழங்கும்) பொருள்களைக் (கொடுப்பதை விட்டும்) தடுக்கிறார்கள்.”

மேற்படி சூராவில் அல்லாஹ், தொழுகை பிட்போடப்படுவதன் பாரிய விளைவு பற்றி தெளிவாக கூறுகின்றான். தொழுகையாளி, தொழுகையில் பாராமுகமாக இருந்து விட்டு அதனை பிட்போடுவதட்கே இவ்வளவு காரசாரமான எச்சரிக்கை என்றால்…. தொழாமல் இருக்கும் மக்களின் கதி என்னவோ ???? மறதி, தூக்கம் இந்த 02 காரணங்களை தவிர , வேறு எந்த விதமான ஏனய உலகளாவிய காரணங்களும் ஒரு மனிதனின் தொழுகையின் பிட்போடுதலுக்கு பின்னணியாகுவதை இஸ்லாம் முற்றாக தடை செய்கின்றது .

இதனையே அல்லாஹ் குர்ஆனில் இவ்வாறு கூறுகின்றான் .
“இறை இல்லங்களில் அவனது பெயர் கூறப்படவேண்டுமென்றும் (அவற்றின் கண்ணியம்) உயர்த்தப்படவேண்டுமென்றும் அல்லாஹ் கட்டளையிடுகிறான். அவற்றில் காலையிலும் மாலையிலும் (முஃமின்கள்) அவனை துதி செய்து கொண்டிருப்பார்கள்”.(24:36)

“(அவ்வாறு துதி செய்யும்) மனிதர்களை அல்லாஹ்வை தியானிப்பதை விட்டும், தொழுகையை முறையாக நிறைவேற்றுவதை விட்டும் ஜகாத் கொடுப்பதை விட்டும் அவர்களுடைய வாணிபமோ கொடுக்கல் வாங்கள்களோ பராமுகமாக்கப்மாட்டர் இதயங்களும், பார்வைகளும் கலங்கித் தடுமாற்றமடையுமே அந்த (இறுதி) நாளை அவர்கள் அஞ்சவார்கள்.” 24:37.
“அவர்கள் செய்த (நற்செயல்களுக்கு) மிக அழகானதை அவர்களுக்கு அல்லாஹ் கூலியாகக் கொடுப்பதற்காகவும், அவனுடைய நல்லருளைக் கொண்டு (அவன் கொடுப்பதை) மேலும் அவன் அதிகப்படுத்துவதற்காகவும் (பயபக்தியுடன் இருப்பார்கள்.) மேலும் அல்லாஹ் தான் நாடியவர்களுக்குக் கணக்கின்றிக் கொடுக்கிறான்.” 24:38.

கல்வி, பணம், உல்லாசம், உறவுகள், கனவுகள். தேடல்கள் , தேவைகள் , அர்ப்பணங்கள், வரவுகள், செலவுகள்…. இவை எல்லாம் மனிதனின் அன்றாடத் தேவைகள் . இவற்றை இஸ்லாம் தடை செய்யவே இல்லை .. ஆனால் இவை அனைத்தும் , உங்களை , உங்களது தொழுகையை விட்டும் தூரமாக்குவதை இஸ்லாம் முற்றாக தடுத்து நிறுத்துகின்றது . வாழ வேண்டும்.. அல்லாஹ்வுக்காக வாழ வேண்டும்… அவனை மறந்து விட்ட வாழ்வில்,… அவனின் அருள் இன்றி போனால் , இந்த வாழ்க்கையின் அர்த்தம் என்னாகுமோ?? ஒரு காபிரை விட்டும் ஒரு முஸ்லிம் வேறு படுத்தப்படுவது தொழுகை என்ற அழகான, ஈமானின் வெளிப்பாட்டினால்தான் … இந்த அடையாளத்தை நாம் ஏனோ தானோ என்று தூக்கி எரிந்து விட்டு, தொழாமல் இருப்பதும்,… மற்றும் சில வேலை தொழுதாலும் அதனில் பாரமுகமாகவும் , விட்டு விட்டு தொழும் பழக்கத்தையும் நிலைநாட்டிக் கொள்வதும் ….. ஒரு புத்தி உள்ள மனிதனின் செயலாக இருக்க முடியாது.

ஏதோ எல்லோரும் தொழுவதனால் நானும் தொழ வேண்டும் என்று நினைக்கும் மக்கள் எம்மில் எத்தனை பேர்?? வேலைப்பளுவினால் தொழ முடியவில்லை அல்லாஹ் என்னை மன்னிப்பான் என்று மடத்தனமான எண்ணம் கொண்டிருப்போர் நம்மில் எத்தனை பேர்?? வாழ்கையில் ஐந்து நேர தொழுகையில் பாராமுகமாக இருந்து விட்டு, ஜுமுஆ தொழுகைக்காக மட்டும் பள்ளி வாயல் செல்லும் மடையர்கள் நம்மில் எத்தனை பேர்???? இன்றைய இளைய இளைஞர்களும், யுவதிகளும் அல்லாஹ்வுக்காக என்று வாழத்தொடங்கியிருப்பது, உண்மையாக ஒரு மகிழ்ச்சியான திருப்புமுனை தான். ஆனால் இந்த உன்னதமான நோக்கத்தை அடைய , அவசியமாக அமையும் இவர்களின் உலகளாவிய தேவைகள் , இவர்களை தொழுகையை விட்டும் தூரமாக்குவதை பற்றி இன்னும் எம், பெற்றோகள் ,தலைவர்கள், மற்றும் சமுதாய சீர்திருத்தவாதிகள் என்போர் சிந்திக்கவில்லை …. இந்தக் கொடிய நிலைப்பாட்டின் விளைவுகள் பற்றிய அறிவு இன்னமும் சமுதாயத்தில் ஊற்றப்படவில்லை ..

ஜுமுஆ தொழுகைகளில் நிரம்ம்பி வழியும் பள்ளி வாயல்கள், இன்னும் சுபஹுத்தொழுகைகளில் நிரப்படவில்லை .. அல்லாஹ் பூமியையே தொழும் இடமாக மாற்றிய பிறகும் , முழு பூமியும் மஸ்ஜித் என்ற எண்ணம் இன்னும் எம் உள்ளங்களில் ஊடுருவவில்லை.. அதனால்தான்……….. அதனால்தான் இன்னமும் ” நாம் பிரயாணத்திலும், பாடசாலைகளிலும், வீதிகளிலும் , வங்கியிலும், பல்கலை கழகங்களிலும் ,”பிசி” என்பதால் தொழுவதற்கு இடமில்லை ” என்ற சாட்டிற்கு மட்டும் பஞ்சமும் இல்லை.!!!! இதனை வாசித்து விட்டு , Like பண்ணுவதில் மட்டும் எந்தப்பயனும் இல்லை … மீண்டும் ஒரு முறை சிந்திப்போம் .. தொழுகையாளி, தொழுகையில் பாராமுகமாக இருந்து விட்டு அதனை பிட்போடுவதட்கே இவ்வளவு காரசாரமான எச்சரிக்கை என்றால்…. தொழாமல் இருக்கும் மக்களின் கதி என்னவோ ????. நாம் இவற்றில் எந்த ரகம் என்பதனையும் சிந்திப்போம் …..

எழுதியவர் :- அப்துல்லாஹ்

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s